அரசியல் இலாபத்திற்காக எமது இராணுவத்தினரை பயன்படுத்தாதீர்கள் - அர்ஜூன ரணதுங்க

ஆசிரியர் - Editor I
அரசியல் இலாபத்திற்காக எமது இராணுவத்தினரை பயன்படுத்தாதீர்கள் - அர்ஜூன ரணதுங்க


'இன்று நாங்கள் சுகந்திரமாக இந்த நாட்டில் இருப்பதற்கு காரணம் எமது இராணுவத்தின் சேவையே ஆகும்.  அதனால் தான் நான் ஆளும் மற்றும் எதிர்கட்சியினரிடம் விடுக்கும் கோரிக்கை எமது இராணுவத்தினரை பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடவேண்டாம் என்பதாகும். 

நான் இந்த வேண்டுகோளை ஊடகங்களுக்கும் விடுக்கின்றேன் என்று பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க  தெரிவித்துள்ளார்.

பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தினை ஆரம்பித்து வைக்கும் வைபவம் கௌரவ அமைச்சர் அர்ஜுன ரணதுங்க  தலைமையில் இன்று(22-05-2018) பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்றறு. 

இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் திரு உபாலி மாரசிங்க அவர்கள், பிரதிச்செயலாளர் திரு எஸ்.எட்டியாராச்சி மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் ஆகியோர் பங்குபற்றிருந்தனர்.

இந்நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

'நான் இராணுவ வீரர்களிடம் கேட்டுக்கொள்வதாவது அரசியல்வாதிகள் உங்களை பயன்படுத்தும் வகையில் இடமளிக்கவேண்டாம் என்று. 

நாங்கள் அனைவரும் கட்சி சார்பற்று இராணுவ வீரர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். உண்மையில் பார்த்தால் தற்போதைய அரசாங்கம் இராணுவவீரர்களை நல்ல விதத்தில் கவனித்துவருகின்றது. 

நாங்கள் மறக்கவில்லை கடந்த அரசாங்கத்தில் இராணுவத்தினரை எப்படி கவனித்தார்கள் என்று.  கடந்த கால அரசாங்கத்தில் இராணுவ வீரர்களை கல்வாய்களை சுத்தம் செய்யவைத்தார்கள். ஆனால் இன்று அவையனைத்தும் மாறிவிட்டது.

இரணுவத்தினருக்கு எமது அரசாங்கமே உயரிய மரியாதையை வழங்கி வருகின்றது என்றார்'. தெடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

பெற்றோல் விலையை கட்டுப்படுத்துவதற்கு சிறந்த வழி புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்குவதேயாகும்.  அதிவேக நெடுஞ்சாலைகளை அமைப்பதை விட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதானது நாட்டிற்கு பெரும் இலாபத்தை ஈட்டித்தரும் என்பது எனது தனிப்பட்ட எண்ணமாகும் என்றார் அமைச்சர்.

இந்நிகழவில் பங்குபற்றிருந்த பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலாளர் தமது கருத்தை தெரிவிக்கையில், 'அரசின் புதிய கொள்கைகளுக்கு அமைய மக்களுக்கு சரியான தகவலை வழங்குவதற்கு அமைச்சு இணையத்தளம் உறுதுணையாக அமையும்.

இந்த புதிய இணையத்தளம் பெற்றோலிய வளத்துறை அமைச்சு பற்றிய மற்றும் அதன் செயற்பாடுகள் பற்றிய அனைத்து தகவல்களையும் வழங்கும். எதிர்வரும் காலங்களில் இதனை மேலும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு