இந்தியா துணை ஜனாதிபதி தேர்தல் ஆரம்பம்!!

ஆசிரியர் - Editor II
இந்தியா துணை ஜனாதிபதி தேர்தல் ஆரம்பம்!!

இந்தியாவின் அடுத்த துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. 

இதில் முதலில் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரும், மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான ஜக்தீப் தன்கர் (வயது 71), கூட்டு எதிர்க்கட்சி வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவை (வயது 80) ஆகியோர் எதிர்த்துப் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு