இலங்கையில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு..

ஆசிரியர் - Editor
இலங்கையில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு..

இலங்கையின் 15 மாவட்டங்களில் தொடரும் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எ ண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக கூறியிருக்கும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலை யம், 38 ஆயிரம் பேருக்கு மேல் இடம்பெயர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்த தகவலின்படி லல்லிஸ்லேண்ட் தோட்டத்தில் இருந்த 105 குடும்பங்களை சேர்ந்த 340 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் நாவலப்பிட்டி பஸ்பாகே கோரளை பிரதேசத்தில் 121 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இவர்கள் அருகில் உள்ள வணக்க தலங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் நுவரேலியா பகுதியில் 12 கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த 53 குடும்பங்களை சேர்ந்த 260 பேர் பாதிக் கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் 10 கிராமசேவகர் பிரிவுகளில்,

3980 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாத்தறை மாவட்டத்தில் 9 குடும்பங்களை சேர்ந்த 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் உள்ளதால் 53 குடு ம்பங்களை சேர்ந்த 207 பேர் இடம்பெயர்ந்த நிலையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

களுத்துறை மாவட்டத்தில் 4 பேர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளனர். இதன்படி அனர் தம் காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.