SuperTopAds

ஸ்டெர்லைட் தனியார் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கி சூடு 8 பேர் உயிரிழப்பு மேலும் பலர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
ஸ்டெர்லைட் தனியார் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கி சூடு 8 பேர் உயிரிழப்பு மேலும் பலர் படுகாயம்..

தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் தனியார் ஆலையை மூடக்கோரி மக்கள் நடாத்திய போராட்டத்தில் இதுவலை 8 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் மக் களுடைய போராட்டம் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தனியார் அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து இன்றைய தினம் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாரிய முற்றுகை போராட்டம் ஒன்றை நடத்தியிருந் தனர். இதனோடு இன்று தூத்துக்குடியில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான கடைகள் மூடப்பட்டன.

போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முற்றுகைக்காக சென்ற பேரணியில் திடீரென கலவரம் உருவாகியுள்ளது. இந்த கலவரத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டது. 

இதனையடுத்து தடுக்க முயன்ற பொலிஸார் முதலில் வானை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து ள்ளனர். பின்னர் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்ததில் சம்பவ இடத்தி லேயே 4 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல நூற்றுக்கணக்கானவர்கள்

படுகாயமடைந்தனர். பின்னர் காயமடைந்தவர்களில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களி ன் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.