கவர்ச்சி நடிகைக்கு திருமணம்!! -மணமகனாகும் பிரபர நடிகர்-

ஆசிரியர் - Editor II
கவர்ச்சி நடிகைக்கு திருமணம்!! -மணமகனாகும் பிரபர நடிகர்-

காதலித்துவரும் கவர்ச்சி நடிகை கியாரா அத்வானியும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கும் மிக விரைவில் திருமணம் செய்துக் கொள்ள போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்மைக்காலமாக இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இருவருக்கிடையே காதல் முறிவு ஏற்பட்டதாகவும், இருவரும் பிரிந்து விட்டதாகவும் அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக கியாரா அத்வானியின் பிறந்தநாளை, அவரது காதலர் சித்தார்த் மல்ஹோத்ரா ஆடம்பரமாக கொண்டாடியுள்ளார். 

துபாயில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தனது காதலியின் பிறந்தநாளை, அவர் வியக்கும் அளவு பிரமாண்டமாக கொண்டாடி பிரமிப்பூட்டியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தன. 

காதலர்களான இருவரும் திருமண வாழ்க்கையில் விரைவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருவீட்டாரும் திருமண பேச்சை ஆரம்பித்து விட்டதாகவும், விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு