இலங்கைக்கு இரு பதக்கங்கள்!! -யுப்புன், பாலித்த வரலாறு படைத்தனர்-

ஆசிரியர் - Editor II
இலங்கைக்கு இரு பதக்கங்கள்!! -யுப்புன், பாலித்த வரலாறு படைத்தனர்-

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் 22 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் யுப்புன் அபேகோன் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.

இதன் மூலம் 92 வருட பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு முதலாவது பதக்கத்தை வென்று கொடுத்த வரலாற்றுச் சாதனையை யுப்புன் அபேகோன் தனதாக்கிக்கொண்டார். 

அத்துடன் 24 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு மெய்வல்லுநர் போட்டியில் பதக்கம் ஒன்று கிடைத்திருப்பது இதுவே முதல் தடவையாகும்.

அலெக்ஸாண்டர் விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 2.00 மணி நடைபெற்ற இறுதிப் போட்டியை 10.14 செக்கன்களில் நிறைவு செய்த யுப்புன் அபேகோன் 3 ஆம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்ற 8 மெய்வல்லுநர்களின் நேரப் பெறுதிகளின் பிரகாரம் யுப்புன் அபேகோன் 8ஆவது இடத்தில் இருந்தவாறே இறுதிப் போட்டியை எதிர்கொண்டார். இருப்பினும் ஆரம்பம் முதல் கடைசி வரை முழு வீச்சில் ஓடிய யுப்புன் அபேகோன் 3 ஆம் இடத்தை உறுதி செய்தார்.

பரா மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்

பரர மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் இலங்கையின் மாற்றுத்திறனாளி எச்.ஜீ. பாலித்த வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

தட்டெறிதல் போட்டியில் பங்குபற்றிய அவர் 44.20 மீற்றர் தூரத்திற்கு தட்டை எறிந்து இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு