சீனா - அமெரிக்கா இடையே பெரும் போர் பதற்றம்!! -தைவான் கடல் பகுதி இரு நாட்டு போர்க் கப்பல்களாலும் முற்றுகை-

ஆசிரியர் - Editor II
சீனா - அமெரிக்கா இடையே பெரும் போர் பதற்றம்!! -தைவான் கடல் பகுதி இரு நாட்டு போர்க் கப்பல்களாலும் முற்றுகை-

சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி, அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, தைவான் சென்றிருந்தார். இதையடுத்து சீனா - அமெரிக்கா இடையே கடுமையான போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

தைவானைச் சுற்றி அமெரிக்க, சீன போர்க் கப்பல்கள் முற்றுகையிட்டுள்ளதால் தென் சீன கடல் பகுதியில் போர் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தகவல் தெரிவிக்கின்றன. 

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி நேற்று முன்தினம் செய்வாய்க்கிழமை தைவான் சென்றார். 

அமெரிக்க ஜனாதிபதிக்கு அடுத்த நிலையில் உயர் பதவியில் உள்ள அந்நாட்டு சபாநாயகர், தைவான் சென்றமை, கடந்த 25 ஆண்டுகளில் இதுவே முதல்முறை. தனது பயணத்தை முடித்துக் கொண்டு அவர் நேற்று மாலை அமெரிக்கா திரும்பினார்.

நான்சி பெலோசியின் தைவான் பயணத்தையொட்டி, தைவான் கடல் பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் நேற்று இருந்து சுற்றி வருகின்றன. அதேநேரத்தில் சீன போர்க்கப்பல்களும் அந்தப் பகுதிக்கு சென்றுள்ளன.

இவ்விடயம் குறித்து சீன இராணுவம் கூறும்போது, 'நாங்கள் தயார் நிலையில் உள்ளோம். நான்சி பெலோசியின் பயணத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவ நடவடிக்கைகளை தொடங்குவோம். இது சீனாவின் இறையாண்மையை பாதுகாக்கும் அவசியமான நடவடிக்கை' என தெரிவித்துள்ளது.

அதற்கேற்ப தைவானைச் சுற்றி 5 நாள் போர் பயிற்சியில் ஈடுபடப் போவதாக சீனா அறிவித்து, போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும் அனுப்பியுள்ளது. தைவான் வான் எல்லைக்குள் சீனாவின் 27 போர் விமானங்கள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அத்துமீறி பறந்தன.

சீனாவின் இந்த நடவடிக்கை, முக்கிய துறைமுகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. அமெரிக்க போர்க்கப்பல்கள் தைவான் கடல் பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கும் நிலையில், அங்கு சீனாவின் போர்க்கப்பல்களும், போர் விமானங்களும் சென்றுள்ளது இரு நாடுகள் இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு