சுதந்திர தின நிகழ்வில் முக்கிய தலைவர்களுக்கு குறி!! -டில்லியில் கூடுதல் பாதுகாப்பு-

ஆசிரியர் - Editor II
சுதந்திர தின நிகழ்வில் முக்கிய தலைவர்களுக்கு குறி!! -டில்லியில் கூடுதல் பாதுகாப்பு-

டில்லியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்னும் தகவல் வெளியாகியுள்ளதால் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் தயாராக இருக்குமாறு உளவுத்துறை எச்சரித்துள்ளது.

நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டம் நடாத்துவதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. டில்லியில் சுதந்திரதின கொடி ஏற்றி பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

இந்நிலையில் உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின்படி சில பயங்கரவாத அமைப்புகள் டில்லி நகரை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பினர் சில முக்கிய தலைவர்களை குறி வைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து டில்லி முழுவதும் முழு எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு