இலங்கையில் காலநிலை சீரின்மையினால் 15 மாவட்டங்கள் பாதிப்பு, 10 ஆயிரம் குடும்பங்கள் இடப்பெயர்வு..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் காலநிலை சீரின்மையினால் 15 மாவட்டங்கள் பாதிப்பு, 10 ஆயிரம் குடும்பங்கள் இடப்பெயர்வு..

இலங்கையில் நிலவிவரும் காலநிலை சீரின்மையினால் 9851 குடும்பங்களை சேர்ந்த 38040 பேர் பாதிக்கப் பட்டுள்ளதாக கூறியிருக்கும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், இலங்கையில் 15 மாவட்டங்க ள் காலநிலை சீரின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. 

இதுவரையில் காலநிலை சீரின்மையினால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஜிங் கங்கை பெருக்கெடு த்துள்ளமையினால் கால மாவட்டத்தில் 1960 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பானதுகம பகுதியில் நில் வளகங்கை பெருக்கெடுத்துள்ளது. 

இதனால் மாத்தளை, கடவத்தை, திஹகொட, மாலிம்பட, கும்புருபிட்டிய, அக்குரஸ்ஸ மற்றும் பிட்டபரந்த ஆகிய பிரதேசங்கள் நிரில் மூழ்கியுள்ளன. இதேபோல் நாட்டின் தென்மேற்கு பகுதியில் இன்றைய தின மும் அடைமழை பெய்து வருகின்றது. 

இதன்படி சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணத்திலும் இன்று இடியுடன் கூடிய மழை பெற்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளதுடன், இந்த மாகணங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிக மான மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் கூறியுள்ளது.

இதேபோல் இலங்கையின் மற்றய பகுதிகளிலும் மாலை 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெ ய்யும் எனவும் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுள் ளது.  

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு