லண்டன் விமான நிலையத்திற்கு அருகில் பாரிய தீ!!

லண்டனில் உறள்ள ஹீத்ரோ விமான நிலையத்திற்கு மிக அருகில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், அந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக அவ்வூடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹீத்ரோ விமான நிலையத்தின் டெர்மினல் 4 இல் இருந்து இரண்டு மைல் தொலைவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஹீத்ரோ செய்தித் தொடர்பாளர் கருத்து வெளியிடுகையில்:- விமான நிலையத்திற்கு வெளியே ஏற்பட்ட தீ காரணமாக, நேற்று மதியம் ஓடுபாதைகளை மாற்றியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தீப்பரவல் விமான நிலையத்தின் நடவடிக்கையை பாதிக்கவில்லை என்பதுடன் திட்டமிட்டபடி விமானங்கள் பரப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.