பொதுநலவாய விளையாட்டுப் போட்டி!! -பதக்க பட்டியலில் அவுஸ்திரேலியா தொடர்ந்து முன்னிலையில்-

ஆசிரியர் - Editor II
பொதுநலவாய விளையாட்டுப் போட்டி!! -பதக்க பட்டியலில் அவுஸ்திரேலியா தொடர்ந்து முன்னிலையில்-

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெறும் இவ்வாண்டுக்கான பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், நேற்றுவரை முடிவடைந்த போட்டிகளின் அடிப்படையில், பதக்கப் பட்டியலில் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. 

குறிப்பாக 22 தங்கம், 13 வெள்ளி, 17 வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக 52 பதக்கங்களை அவுஸ்திரேலியா பெற்றுள்ளது. 2 ஆம் இடத்தில் உள்ள இங்கிலாந்து 11 தங்கம், 16 வெள்ளி, 7 வெண்கலம் அடங்கலாக 34 பதக்கங்களை பெற்றுள்ளது.

அதேநேரம், 10 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களுடன், நியுஸிலாந்து 3 ஆம் இடத்திலும், 4 தங்கப் பதக்கங்களுடன் தென்னாப்பிரிக்கா 4 ஆம் இடத்திலும், 3 தங்கப் பதக்கங்களுடன் கனடா 5 ஆம் இடத்திலும் உள்ளன.

இந்த பட்டியலில் ஒரு வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ள இலங்கை அணி 23 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு