அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடன் உதவுங்கள் ஜனாதிபதி பணிப்பு...

ஆசிரியர் - Editor
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடன் உதவுங்கள் ஜனாதிபதி பணிப்பு...

இலங்கையின் பல மாவட்டங்களில் கனமழையினால் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தம் உருவாகியுள்ளது. இதுவரை இந்த அனர்த்தங்களினால் 7பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்நிலையில் அனர்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தேவையான உதவிகi ள உடன் வழங்குமான ஜனாதிபதி பணித்துள்ளார். 

நாட்டின் பல மாவட்டங்களில் இடைவிடாது பெருமழை பெய்து வருகின்றது. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், மேலும் பல மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் எழுந்துள்ளது. இதனால் பெருமளவான மக்கள் தம் இருப்பிடங்களை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை

மீட்பதற்கான முப்படையினதும் உதவிகளை பெற்றுக்கொள்ளும்படி கேட்டிருக்கும் ஜனாதி பதி நிதி ஒதுக்கீடுகளை தடையாக கருதாம் மக்களுக்கு தேவைப்படும் உதவிகளை உடனடி யாகவே செய்யும்படி கூறியிருக்கின்றார். வெள்ளம் மற்றும் மண்சரிவு பாதிப்பு தொடர்பாக மாவட்ட செயலர்களுடன் நடைபெற்ற கூட்டத்தின் பின்னதாகவே ஜனாதிபதி இந்த அறிவிப்பை

விடுத்திருக்கின்றார்.