மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு!! -பாடசாலையை முற்றுகையிட்ட பெற்றோர்-

ஆசிரியர் - Editor II
மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு!! -பாடசாலையை முற்றுகையிட்ட பெற்றோர்-

இந்தியாவின் கோவை அருகே உள்ள பாடசாலையில் கல்வி கற்கும் மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு செய்வதாக குற்றம் சுமத்திய பெற்றோர் அப்பாடசாலையை முற்றுகையிட்டனர்.

கோவை சுகுணாபுரம் அரச நடுநிலைப் பாடசாலை இயங்கி வருகின்றது. குறித்த பாடசாலையில் உடல் பயிற்சி ஆசிரியராக பிரபாகரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி பாடசாலையை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு