நிர்வாண புகைப்படம் வெளியிட்ட ரன்வீர் சிங்!! -ஆடை நன்கொடை வழங்கி நூதன போராட்டம்-
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் அண்மையில் வெளியிட்ட நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவரது நிர்வாணப் புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பின. ரன்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்கும்படி தொண்டு நிறுவனம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மும்பை பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள இந்தூரில் ரன்வீர் சிங்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவருக்கு ஆடைகள் நன்கொடையாக அனுப்பும் போராட்டத்தை தொண்டு நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
அங்குள்ள வீதியோரங்களில் மேசை மீது ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படத்தை ஒட்டிய பெட்டி வைத்துள்ளனர். அந்த பெட்டிக்குள் பலர் ரன்வீர் சிங்குக்கு ஆடைகள் நன்கொடை வழங்கும் விதமாக பழைய பேண்ட், சட்டை, பனியன், டீசர்ட் போன்ற துணிமணிகளை கொண்டு வந்து போடுகிறார்கள்.