SuperTopAds

ஜனாதிபதி மாளிகைக்கு சொந்த மண்ணின் மகளை அழைத்து மகிழ்ச்சிப்படுத்திய திரவுபதி!!

ஆசிரியர் - Editor II
ஜனாதிபதி மாளிகைக்கு சொந்த மண்ணின் மகளை அழைத்து மகிழ்ச்சிப்படுத்திய திரவுபதி!!

ஜனாதிபதி மாளிகையில் திரவுபதி முர்முவுடன் மதிய உணவு சாப்பிடும் வாய்ப்பு கிடைத்ததால், ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

ஒடிசாவில், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் சொந்த மாவட்டமான மயூர்பஞ்சில் பழங்குடியினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியைச் சேர்ந்த 60 பேர், ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதில், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் தோழியரும் அடங்குவர்.

பதவியேற்பு விழா முடிந்த பின், இவர்கள் அனைவருக்கும் திரவுபதி முர்மு மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தார். இவர்கள் அனைவரும் ஜனாதிபதியுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர். தங்கள் மண்ணின் மகளுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டது இன்ப அதிர்ச்சி அளித்தது என அவர்கள் தெரிவித்தனர்.