நிர்வாண போஸ் கொடுத்த நடிகர் மீது வழக்கு!! -கைதாக வாய்ப்பு-
நடிகர் ரன்வீர் சிங் அண்மையில் நிர்வாண போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தினார். இதுதொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அவர் கைதாகவும் வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக ரன்வீர் தனது நிர்வாண போட்டோக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று மும்பை பொலிஸில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளது.
அந்த முறைப்பாட்டில் ‛‛ரன்வீர் சிங் நிர்வாண போட்டோவை வெளியிட்டு பெண்களின் உணர்வை புண்படுத்தி விட்டார். பேச்சு, கருத்து சுதந்திரம் வேண்டும் என்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். அதற்காக சமூகத்தில் நிர்வாணமாக உலவ வேண்டும் என்று அர்த்தமில்லை.
நடிகர்களை கடவுள் போன்று சிலர் வணங்குகிறார்கள். அவர்களை பின்பற்றியும் வருகிறார்கள். ரன்வீர் சிங் இதுபோன்று மலிவான விளம்பரத்தை பெற முயற்சிக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து ரன்வீர் சிங் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக அவர் கைதாகவும் வாய்ப்புள்ளதாக தெரியவருகின்றது.