சர்ச்சையை எழுப்பப் போகும் மற்றுமொரு படம்!! -விரையில் வெளிவரவுள்ளது-
மிக விரைவில் ஓடிடி தளத்தில் ஹோலிவோண்ட் (புனித காயம்) என்கிற மலையாளப் படம் வெளியிடப்படவுள்ளது. அசோக் ஆர் நாத் என்கிற புதுமுகம் இயக்கி உள்ள இந்த படத்தில் ஜானகி சுதீர், அம்ரிதா வினோத், சபு பருதீன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
உன்னி மடாவூர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், ரோனி ரபேல் இசை அமைத்துள்ளார். ஆகஸ்ட் 12 ஆம் திகதி ஓடிடி தளத்தில் வெளிவருகிறது.
பாடசாலையில் இருந்தே நெருங்கிய தோழிகளாக இருக்கும் இருவரின் லெஸ்பியன் உறவை பற்றியதுதான் கதை. தோழிகளில் ஒருத்தி பிடிக்காத ஒருவனுக்கு மனைவியாகிறாள். அவன் மூலம் பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட பல இன்னல்களுக்கு ஆளாகிறாள். இன்னொருத்தி வலுக்கட்டாயமாக கன்னியாஸ்திரி ஆக்கப்படுகிறாள்.
ஒருத்திக்கு ஆணின் பாலியல் கொடுமையும், ஒருத்திக்கு ஆண்துணையே இல்லாத நிலையும் வாழ்வில் அமைகிறது. இதனால் அவர்கள் தங்களின் சுய சந்தோஷத்திற்காக லெஸ்பியனாகிறார்கள். அவர்களின் இந்த உறவை சமூகமும், மதமும் எப்படி பார்க்கிறது என்பதுதான் படத்தின் கதை என்கிறார்கள்.