SuperTopAds

இந்தியாவின் 15 ஆவது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு தெரிவு!!

ஆசிரியர் - Editor II
இந்தியாவின் 15 ஆவது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு தெரிவு!!

இந்தியா நாட்டின் 15 ஆவது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு நேற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அந்நாட்டின் 15 ஆவது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் கடந்த ஜூலை 19 ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், குறித்த தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

இந்நிலையில், ஆளும் மத்திய அரசான பாஜக சார்பில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்மு மற்றும் எதிர்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிட்டிருந்த நிலையில், தற்போது திரௌபதி முர்மு வெற்றி பெற்றுள்ளார்.

15 ஆவது குடியரசுத் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள திரௌபதி முர்மு, ஒடிசாவைச் சேர்ந்த பிரபல பழங்குடியின தலைவரும் ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநருமாவார்.

இந்தியாவின் 15 ஆவது குடியரசுத் தலைவராக தெரிவுசெய்யபடப்பட்டுள்ள திரௌபதி முர்முவிற்கு பல்வேறு அரசியல் பிரமுகர்களும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.