மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றி சோதனை!! -பரீட்சை அதிகாரிகள் கைது-

கேரளாவில் ஆயுர் நீட் தேர்வு மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பிணையில் வெளிவரமுடியாத பிரிவில் பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.
கொல்லம் மாவட்டம் ஆயுர் பகுதியில் கடந்த 17 ஆம் திகதி நீட் தேர்வு நடந்தது. இத்தேர்வு எழுத சென்ற மாணவிகளிடம் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றி சோதனை செய்தனர்.
இதில் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். அதன்பேரில் விசாரணை செய்த பொலிஸார் ஆயுர் நீட் தேர்வு மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பிணையில் வெளிவரமுடியாத பிரிவில் பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் இன்று வியாழக்கிமை மேலும் 2 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் நீட் தேர்வு மைய பார்வையாளராகவும், இன்னொருவர் தேர்வு ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியவர்கள் ஆவர். இருவரிடமும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே கேரளாவில் இப்பிரச்சினையை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதுபற்றி கேரள அரசு மத்திய அமைச்சருக்கும், தேசிய திறனறி தேர்வு மையத்திற்கும் முறைப்பாட்டு மனு அனுப்பியது.
அதன்பேரில் ஆயுர் நீட் தேர்வு மையத்தில் நடந்தது என்ன? என்பது பற்றி விசாரிக்க உண்மை கண்டறியும் குழுவை நீட் தேர்வு திறனறி மையம் அனுப்பி உள்ளது. அவர்கள் கேரளாவில் நடந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த உள்ளனர்.