SuperTopAds

88 ஆவது புனிதர்கள் சமர் மாபெரும்!! -சமநிலையில் நிறைவு-

ஆசிரியர் - Editor II
88 ஆவது புனிதர்கள் சமர் மாபெரும்!! -சமநிலையில் நிறைவு-

இன்று வியாழக்கிழமை 88 ஆவது புனிதர்கள் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் புனித பேதுருவானவர் அணி ஆதிக்கம் செலுத்தியபோதிலும் சதீஷ் ஜயவர்தனவின் ஆட்டம் இழக்காத சதத்தின் உதவியுடன்  புனித சூசையப்பர் அணி ஆட்டத்தை சமப்படுத்திக்கொண்டது.

பி.சரவணமுத்து ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப் போட்டியில் மிகவும் கடினமான 321 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி 2 ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய புனித சூசையப்பர் அணி 5 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந்த வருடம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியில் இடம்பெற்ற அணித் தலைவர் துனித் வெல்லாலகே, ஷெவொன் டெனியல் ஆகியோர் புனித சூசையப்பர் அணியில் இடம்பெற்றபோதிலும் அவ்வணியினால் எதிர்பார்த்தளவு சாதிக்க முடியாமல் போனது.

அப் போட்டியில் துனித் வெல்லாலகேயை இரண்டு இன்னிங்ஸ்களிலும் நிமன் உமேஷ் ஆட்டமிழக்கச் செய்தார்.

புனித சூசையப்பர் அணியில் ஒரு பக்கத்தில் விக்கெட்கள் சரிந்து கொண்டிருக்க, ஆரம்ப வீரர் சதீஷ் ஜயவிக்ரம மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 103 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

சதீஷ் ஜயவிக்ரமவை விட புனித பேதுருவானர் அணி வீரர்களான ஷெனால் பொத்தேஜு, தனல் ஹெமானந்த, அபிலாஷ் வெல்லாலகே, லஹிரு தெவட்டகே, புனித சூசையப்பர் வீரர் ஷெவொன் டெனியல் ஆகியோர் இந்த வருட புனிதர்களின் சமரில் அரைச் சதங்களைக் குவித்து பாராட்டைப் பெற்றனர். ஷெவொன் டெனியல் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்தமை மற்றொரு விசேட அம்சமாகும்.