SuperTopAds

உக்ரேன் ஜனாதிபதியின் மனைவி அமெரிக்காவிற்கு திடீர் விஜயம்!!

ஆசிரியர் - Editor II
உக்ரேன் ஜனாதிபதியின் மனைவி அமெரிக்காவிற்கு திடீர் விஜயம்!!

உக்ரேன் நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் செலன்ஸ்கியின் மனைவியும் முதல் பெண்மணியுமான ஒலேனா ஜெலென்ஸ்கா செவ்வாய் அன்று வொஷிங்டனுக்கான தனது உயர்மட்ட பயணத்தின் ஒரு பகுதியாக வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்திருந்தார். 

அவரை அமெரிக்கா நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 

உக்ரேனின் தேசிய கொடியின் வண்ணம் கொண்ட  மஞ்சள் சூரியகாந்தி, நீல ஹைட்ரேஞ்சா மற்றும் வெள்ளை ஒர்க்கிட்  பூக்களை கொண்ட பூங்கொத்தை கொடுத்து அவரைபைடன் வரவேற்றார். 

ஒலேனா ஜெலென்ஸ்கா வெளியுறவு செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாக அதிகாரி சமந்தா பவரை திங்கட்கிழமை சந்தித்தார்.

அப்போது,  ரஷ்யாவின் உக்ரேன் மீதான மோதல் நீண்டகால உளவியல் சமூக தாக்கங்கள் பற்றி பேசப்பட்டதாக  வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

முன்னதாக செவ்வாய்கிழமை, உக்ரேன் மக்கள் சார்பாக மனித உரிமைகள் விருதை பெற்றுக்கொள்வதற்காக, வொஷிங்டனில் உள்ள புதிய பாதிக்கப்பட்ட கம்யூனிசம் அருங்காட்சியகத்திற்கு ஜெலென்ஸ்கா விஜயம் செய்தார்.

இன்று உரேனில் நிலத்தடி பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் மனிதாபிமான நிலைமைகள் குறித்த புதுப்பிப்பை வழங்குவதற்காக காங்கிரஸில் ஜெலென்ஸ்கா உரையாற்ற உள்ளார்.

பெப்ரவரி 24 அன்று உக்ரேன் மீது ரஷ்யா ஒரு  சிறப்பு இராணுவ நடவடிக்கையை ஆம்பித்தது, இது தேவையற்ற மோதல் என்று மேற்கு நாடுகள் கூறியது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக, மேற்கத்திய நாடுகளும் மொஸ்கோ மீது பல தடைகளை விதித்துள்ளன.