இலங்கையை வெற்ற பாகிஸ்தான்!!
காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடந்த பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிராக முதலாவது டெஸ்ட் போட்டியின் இறுதிநாளான இன்று இலங்கையை 4 விக்கெட்களால் பாகிஸ்தான் அபார வெற்றிகொண்டது.
அப்துல் ஷபிக் மிகவும் திறமையாக அதேவேளை பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காது 160 ஓட்டங்களைப்பெற்று பாகிஸ்தானின் வெற்றியை உறுதி செய்திருந்தார்.
போட்டியில் வெற்றிபெறுவதற்கு கடைசி நாளன்று பாகிஸ்தானுக்கு மேலும் 120 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன் இலங்கைக்கு 7 விக்கெட்களை வீழ்த்த வேண்டி இருந்தது.
போட்டியின் கடைசி நாளான நேற்றுக் காலை தனது 2 ஆவது இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 222 என்ற நல்ல நிலையிலிருந்து பாகிஸ்தான் தொடர்ந்தது.
அப்புதுல்லா ஷபிக், மொஹமத் ரிஸ்வான் ஆகிய இருவரும் மிகவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கையை 276 ஓட்டங்களாக உயர்த்தியோது, 40 ஓட்டங்ளைப் பெற்றிருந்த மொஹமத் ரிஸ்வானை எல்பிடபிள்யூ முறையில் ப்ரபாத் ஜயசூரிய ஆட்டமிழக்கச் செய்தார்.
ஷபிக், ரிஸ்வான் ஆகிய இருவரும் 4 ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 81 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
அதனைத் தொடர்ந்த அறிமுக வீரர் அகா சல்மானின் விக்கெட்டை ஜயசூரியவும் ஹசன் அலியின் விக்கெட்டை தனஞ்சய டி சில்வாவும் வீழ்த்தி இலங்கைக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.
இருப்பினும் பாகிஸ்தான் 6 விக்கெட்களை இழந்து 331 ஓட்டங்கைளப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது.
வெற்றிக்கு 11 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் ஆட்டம் தொடர்ந்தையடுத்து பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்து 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று 1- 0 என முன்னிலை பெற்றுள்ளது.