மு.க.ஸ்டாலின் வைத்தியசாலையில் அனுமதி!!

ஆசிரியர் - Editor II
மு.க.ஸ்டாலின் வைத்தியசாலையில் அனுமதி!!

இந்தியாவின் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் சினிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் தொற்றுறுதியானதை அடுத்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் அவர் தம்மை சுயதனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்தநிலையில் அவர் சென்னையில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சி.ரி.ஸ்கேன் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான அறிகுறிகள் குறித்து மு.க ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருவதாக வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு