குருந்துார் மலையிலிருந்து சட்டவிரோதமான சகல கட்டுமானங்களையும் அகற்றுங்கள்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

ஆசிரியர் - Editor I
குருந்துார் மலையிலிருந்து சட்டவிரோதமான சகல கட்டுமானங்களையும் அகற்றுங்கள்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

முல்லைத்தீவு குருந்துார் மலையில் சட்டவிரோதமாக நிறுவப்பட்டிருக்கும் அனைத்துக் கட்டுமானங்களையும் உடன் அகற்றுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர், 16ஆம் திகதி குருந்தூர்மலை தொடர்பில் ஏற்கனவே முல்லைத்தீவு நீதவான் நீதி மன்றில் தொடரப்பட்ட வழக்கினை நகர்த்தல் பத்திரம் அணைத்து, 

ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய கட்டளையினை மதிக்காமல் அவமதிப்புச் செய்து, அங்கு அமைக்கப்பட்ட விகாரை தொடர்பிலும், பொலிஸார் தொடர்ச்சியாக இந்த வழக்கிலே நீதிமன்றிற்கு வழங்கவேண்டிய அறிக்கைகளை வழங்காது, 

சட்டத்தை மீறிச் செயற்படுபவர்களுக்கு சார்பாகச் செயற்பட்டதையும் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் அனைவரும் இணைந்து மன்றில் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

அதன் தொடராக தவணையிடப்பட்ட வழக்கு விசாரணைக்கான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதன்போது சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர்சிலை உட்பட்ட கட்டுமானங்களை அகற்றுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

ஆலய நிர்வாகம், து.ரவிகரன் சார்பில் சட்டத்தரணி வி.எஸ்.தனஞ்சயன் முன்னிலையாகியிருந்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு