பெண் கிராம சேவகரை மிரட்டிய புதையல் திருடர்கள்! அதே இடத்தில் நின்று வேடிக்கை பார்த்த பொலிஸார், பிரதேச செயலர் மௌனம்...
காணியை துப்புரவு செய்வதாக கூறி புதையல் தோண்டப்படுவதாக மக்கள் வழங்கிய முறைப்பாட்டை பரிசீலணை செய்ய சென்றிருந்த பெண் கிராம சேவகரி பொலிஸார் முன்னிலையில் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,
புதையல் தோண்டப்படுகின்றது என கிராம மக்களின் முறைப்பாடு வழங்கியுள்ளனர். அதற்கமைய குறித்த பகுதிக்கு என்ற பெண் கிராம அலுவலரே புதையல் திருடர்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்தில் புதையல் திருடர்களுடன் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் நின்றபோதும் அவர்கள் முன்பாகவே கிராமசேவகரை புதையல் திருடர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்படபோதும் பொலிஸார் அசண்டையீனமாக இருப்பதாக தெரிவித்த கிராம மக்கள், சொந்த காணியில் துப்பரவு பணிகளை செய்வதாயின்
பிரதேச செயலகத்தில் அனுமதி பெறப்படல் வேண்டும் என்று கூறி காணி துப்பரவு பணியில் ஈடுபடும் வாகனங்களை பிரதேச செயலாளர் கையகப்படுத்தி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து வழக்கு தாக்கல் செய்பவர்,
குறித்த சம்பவம் தொடர்பில் மௌனம் சாதிப்பது வேதனையடைய செய்வதாக தெரிவித்தனர் இதேவேளை மாந்தை கிழக்கு பகுதிக்கு நேற்றைய தினம் வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர் விநோதரலிங்கம்
புதையல் தோண்டியதாக சந்தேகிக்கப்படும் இடத்தினை பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.