அதிக சுமையினால் மண் திட்டின் மீது குடைசாய்ந்த பேருந்து! இருவர் உடல் நசுங்கி பலி, பேருந்தை கொழுத்தி ஆத்திரத்தை தீர்த்த மக்கள்..

ஆசிரியர் - Editor I
அதிக சுமையினால் மண் திட்டின் மீது குடைசாய்ந்த பேருந்து! இருவர் உடல் நசுங்கி பலி, பேருந்தை கொழுத்தி ஆத்திரத்தை தீர்த்த மக்கள்..

பயணிகள் பேருந்து மண் மேட்டின் மீது குடைசாய்ந்ததில் இருவர் உடல் நசுங்கி உயிாழந்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து பொதுமக்கள் விபத்துக்குள்ளான பேருந்தை தீயிட்டு கொழுத்தியுள்ளனர். 

குறித்த சம்பவம் நேற்று காலை புஸல்லாவ - காச்சாமலை வீடன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

புஸ்ஸலாவ, பெரட்டாசி தோட்டத்திலிருந்து, புஸ்ஸலாவை நகரத்துக்கு பயணிகளை ஏற்றிவந்த பஸ்ஸொன்றே, வீடன் பகுதியில் வைத்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் புட்போட்டில் பயணித்த இருவரே, பஸ் மண்திட்டில் சாய்ந்ததால், உடல் நசுங்கி உயிரிழந்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் பெரட்டாசி தோட்டத்தில் வசிக்கும் சுரேன்ஜித் புஷ்பகுமார் (39 வயது) 

மற்றும் ஹெல்போட 7ம் கட்டை தோட்டத்தில் வசிக்கும் விஜயகுமார் கவிஷ்கர் (20 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுமார் 80 பேர் வரை பஸ்ஸில் பயணித்துள்ளனர், அதிகளவான பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்ததாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது, பலர் புட்போட்டிலும் தொங்கிக்கொண்டு பயணித்துள்ளனர்.

சிறு காயங்களுக்குள்ளானவர்கள் ஆரம்பக்கட்ட சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் புஸல்லாவை, வகுவப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து சம்பவத்தால் ஆத்திரமடைந்த மக்கள், பஸ்ஸை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். பெரட்டாசி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு