லைவ் லொக்கேஷனை அனுப்புங்கள்!! -திரிஷாவுடன் கேட்ட கார்த்தி-

ஆசிரியர் - Editor II
லைவ் லொக்கேஷனை அனுப்புங்கள்!! -திரிஷாவுடன் கேட்ட கார்த்தி-

மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் அப்படத்தின்  போஸ்டர்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். 

இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதன் முதல் பாகமான 'பொன்னியின் செல்வன்-1' வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் இடம்பெறும் கதாப்பாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியதேவனாக கார்த்தியும், நந்தினியாக ஐஸ்வர்யாராயும், குந்தவையாக திரிஷாவும் படத்தில் இடம்பெற்றுள்ளனர். இந்த போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் திரிஷாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கார்த்தி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து அவரை கலாய்த்துள்ளார். அதில், 'இளவரசி... ப்ளீஸ் உங்களின் லைவ் லொக்கேஷனை அனுப்புங்கள். உங்கள் அண்ணனின் ஓலையை ட்ராப் ஆப் பண்ணனும்' என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு