கடற்கரையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட வயோதிப தம்பதிகளில் ஒருவர் உயிரிழப்பு..!
மயக்கமடைந்த நிலையில் தமிழகம் கோதண்டராமர் கடற்கரையிலிருந்து மீட்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவந்த இலங்கை அகதிகளான இரு முதியவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மன்னார் கொல்லர் ஸ்ரீகுளத்தை சேர்ந்த பொியண்ணன் (வயது82), திருகோணமலையை சேர்ந்த பரமேஸ்வரி (வயது71) என தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.
மேற்படி இருவரும் தலைமன்னார் பகுதியிலிருந்து படகுமூலம் தமிழகம் கோதண்டராமர் கடற்கரையில் இறக்கிவிடப்பட்டநிலையில், மயங்கிய நிலையில் கடற்கரையோரத்திலிருந்து மீட்கப்பட்டனர்.
பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 6 நாட்களாக சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் வயோதிப பெண் உயிரிழந்துள்ளார்.