இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி!! -இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி-
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா மகளிர் கிரிக்கெட் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடந்தது. இதில் நாணயசுழல்ச்சியில் வென்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ஓட்டங்களை பெற்றது. அதிகப்பட்சமாக நிலாக்ஷி டி சில்வா 43 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து 172 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷவாலி வர்மா - மந்தனா ஜோடி ஆடினர். மந்தனா 4 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்து வந்த பாட்டியா ஓரு ஓட்டத்துடன் போல்ட் ஆனார். அடுத்த வந்த அணித்தலைவர் கவூர் - ஷவாலி வர்மாவுடன் ஜோடி சேர்ந்து ரன் குவிக்க ஆரம்பித்தனர்.
ஒரு பவுண்டரி 2 சிக்சர் அடித்த ஷவாலி வர்மா 35 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை பறிக்கொடுத்தார். அடுத்து வந்த ஹர்லீன் தியோல்- கவூர் ஜோடி சேர்ந்து ஆடினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கவூர் 44 ஓட்டத்துடன் வெளியேற சிறிது நேரத்தில் ஹர்லீன் தியோல் 34 ஓட்டத்துடன் வெளியேறினார்.
இந்திய அணி 103 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை பறிக்கொடுத்திருந்தது. அடுத்து வந்த ரிச்சா கோஷ் 6 ஓட்டங்களுடன் வெளியேறினார். 4 விக்கெட்டுகள் மட்டுமே மீதம் இருந்த நிலையில் தீப்தி வர்மா- பூஜா ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.
இந்திய அணி 38 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அதிகப்பட்சமாக கவூர் 44 ஓட்டங்களை அடித்தார். இலங்கை அணி தரப்பில் இனோகா ரணவீரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய மகளிர் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 2 ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 4 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.