2 ஆவது இன்னிங்சில் 113 ஓட்டங்களுக்குள் சுருண்ட இலங்கை!! -அவுஸ்ரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி-
இலங்கை அணி 2 ஆவது இன்னிங்சில் 113 ஓட்டங்களுக்குள் சுருண்டு கொண்டதால் அவுஸ்ரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாராமான வெற்றி பெற்றுள்ளது.
அவுஸ்ரேலியா - இலங்கை கிரிக்கெட் அணிகள் முதல் டெஸ்ட்டில் விளையாடியது. நாணயசுழல்ச்சியில் பெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாடி தீர்மானித்தது. முதல் இன்னிங்சில் 59 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. அவுஸ்ரேலியா தரப்பில் நாதன் லயன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து முதல் இன்னிங்சை அவுஸ்ரேலியா தொடங்கியது.
அவுஸ்ரேலியா அணி 70.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 321 ஓட்டங்களை பெற்றது. இதனால் அவுஸ்ரேலியா அணி 109 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.
இந்நிலையில் இலங்கை அணி 2 ஆவது இன்னிங்சை தொடங்கியது. நாதன் லயன் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி 113 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இதனால் 4 ஓட்டங்கள் மட்டுமே முன்னிலை பெற்றது.
5 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்ரேலியா அணி ஆடியது. 4 பந்துகள் மட்டுமே சந்தித்த ஆஸ்திரேலியா 10 ஓட்டங்களை பெற்றது. இதில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் அடங்கும்.
இதனால் அவுஸ்ரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டும் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலியா முன்னிலை வகிக்கிறமை குறிப்பிடத்தக்கது.