பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களுக்கான உளவளத்துணை கருத்தரங்கு

ஆசிரியர் - Editor III
பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களுக்கான உளவளத்துணை கருத்தரங்கு

அரச திணைக்களங்களில் பணிபுரிந்து வரும் பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களுக்கான  ஒரு நாள் உளவளத்துணை கருத்தரங்குகள் நாடு பூராகவும் இடம்பெற்று வருகின்றன. 

 இன்று அம்பாறை மாவட்டம் கல்முனை  பிரதேச செயலகத்தில் இணைப்பு செய்யப்பட்ட பல்வேறு அரச திணைக்களங்களில்  பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களாக கடமையாற்றுபவர்களுக்கான   உளவளத்துணை கருத்தரங்கு பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எம் அபுல் ஹசன்  தலைமையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.எஸ்.எஸ்.ஹஸன்  எம்.ஏ.எப்.ரினோபா  ஆகியோரின் ஒழுங்குபடுத்தலின் ஊடாக கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்  சிறப்பாக    இடம்பெற்றன.

 இக்கருத்தரங்கானது  பல்நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்ளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் இக்கருத்தரங்கில்  தற்கொலை மற்றும் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்தல் எனும் தொனிப் பொருளில் உளவளத்துணை தொடர்பில் விழிப்பூட்டல்  வழங்கப்பட்டன.

இக்கருத்தரங்கில் கல்முனை பிரதேச செயலாளர்  ஜெ.லியாகத் அலி  பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உளவளத்துணை தொடர்பாக சிறப்புரை ஒன்றினை ஆற்றியிருந்ததுடன் வளவாளர்களாக கல்முனை பிரதேச செயலக  உளவளத்துணை அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.ஐ.ஹபீபா மற்றும்  எம்.எச்.எம் இம்தீஸா ஆகியோர்   கலந்து கொண்டு செயலமர்வினை சிறப்பித்து நடத்தியிருந்தனர்.

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு