SuperTopAds

முள்ளிவாய்க்காலில் நினைவுத் தூபி அமைக்க மைத்திரியிடம் விஜயகலா வலியுறுத்து

ஆசிரியர் - Admin
முள்ளிவாய்க்காலில் நினைவுத் தூபி அமைக்க மைத்திரியிடம் விஜயகலா வலியுறுத்து

இறுதிப் போரில்  உயி­ரி­ழந்த உற­வுகளை  நினை­வு­கூருவதற்கு  முள்ளி­வாய்க்­காலில்  நினை­வுத்தூபி அமைக்க   உட­னடி நடவடிக்கை எடுக்­க­வேண்டும் என்று  சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன்,   ஜனா­தி­பதி மைத்திரிபால சிறி­சே­ன­வை நேற்று (16) நேரில் சென்று வலியுறுத்தினார்.

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சரின் ஊடகப் பிரிவி அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்றுக் காலை சந்தித்தார்.ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை அமைக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் தாம் இது தொடர்பில் மக்களுக்கு வாக்குறுதி வழங்கி ஆதரவு பெற்றதாகவும் விஜயகலா மகேஸ்வரன், ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தார்.

அத்துடன் விஜயகலா மகேஸ்வரன் இது குறித்து  ஜனா­தி­ப­தியிடம்  கடி­த­மொன்­றையும் கையளித்தார்.

இறுதி போரின்போது  பெருந்­தொ­கை­யான  அப்­பா­வி­மக்கள்   உயி­ரி­ழந்­துள்­ளனர்.  கிளி­நொச்சி, யாழ்ப்­பாணம்,  மன்னார்,  முல்­லைத்­தீவு, வவு­னியா ஆகிய மாவட்­டங்­களை  சேர்ந்த மக்கள்  இறுதிப் போரின்­போது முள்­ளி­வாய்க்­காலில்  உயிரிழந்தனர்.

படைத்­த­ரப்­பி­ன­ருக்கும்   விடுதலைப் புலி­க­ளுக்­கு­மி­டை­யி­லான  பரஸ்­பர மோத­லிலும்   இத்­த­கைய உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­பட்­டி­ருந்­தன.

2009ஆம் ஆண்டு இடம்­பெற்ற  இந்த  உயி­ரி­ழப்­புக்­களை நினை­வு­கூரும் வகையில்   முள்­ளி­வாய்க்­காலில் நினை­வேந்தல் நிகழ்வு  நடத்­தப்­பட்டு வரு­கின்­றது.

2015ஆம் ஆண்டு  நல்­லாட்சி அரசு  பத­விக்கு வந்­த­தை­ய­டுத்து  மே மாதம்  சுதந்­தி­ர­மான முறையில்  முள்­ளி­வாய்க்­காலில்  நினை­வேந்தல் நிகழ்வு நடத்­தப்­பட்­டது.

போரில் உயி­ரி­ழந்த  உற­வு­களை  நினை­வு­கூரும் வகையில்  முள்­ளி­வாய்க்­காலில் நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்படவேண்டியது  அவசியமான தாகும்.  இதற்கான  தேவையான நடவடிக் கைகளை  விரைந்து  எடுக்கவேண்டும் என்று தங்களிடம்  கோருகின்றேன் – என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடி­தத்தின் பிரதி  பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர்  ருவன் விஜ­ய­வர்த்­தன,  ஜனா­தி­ப­தியின்  செய­லாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ,  பாது­காப்பு அமைச்சின்  செய­லாளர் ஆகி­யோருக்கும் அனுப்­பி­வைக்­கப்­பட்­டன – என்று இராஜாங்க அமைச்சரின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.