ரஷ்யாவின் அச்சுறுத்தலால்!! -ஐரோப்பாவில் அமெரிக்க படைகள் அதிகரிப்பு-
ரஷ்யாவின் அச்சுறுத்தலால் ஐரோப்பாவில் அமெரிக்க படைகளை அதிகரித்து உள்ளதாக அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்கை சந்தித்து பேசிய ஜனாதிபதி பைடன், நேட்டோ படைகளின் பலத்தை மேலும் வலுப்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.
போலந்தில் ஒரு நிரந்தர தலைமையகத்தை அமெரிக்கா அமைக்க உள்ளதாகக் கூறிய பைடன், பிரிட்டன், ஜெர்மன், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு கூடுதல் படைகள் அனுப்பப்படும் என குறிப்பிட்டார்.