SuperTopAds

நாதன் லயன் சுழலில் சிக்கிய இலங்கை!! -212 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது-

ஆசிரியர் - Editor II
நாதன் லயன் சுழலில் சிக்கிய இலங்கை!! -212 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது-

இலங்கையில் அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று புதன்கிழமை ஆரம்பமானது. 

இதில் நாணயசுழல்ச்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிசாங்கா மற்றும் அணித்தலைவர் கருரத்ணே களமிறங்கினர். 

நிசாங்கா 23 ஓட்டங்கள் பெற்ற நிலையில் கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.  அடுத்து வந்த குசல் மெண்டீஸ் 3 ஓட்டங்களை பெற்ற நிலையில் வந்த வேகத்தில் மைதானத்தை விட்டு வெளியேறினார். 

மேத்யூஸ் - கருரத்ணே ஜோடி சிறிது நேரம் தாக்கு பிடித்து விளையாடினார். 13 ஓவர்கள் விக்கெட் கொடுக்காமல் தாக்குபிடித்த அந்த ஜோடியை நாதன் லயன் பிரித்தார். 

கருரத்ணே 28 ஓட்டங்கள் இருந்த போது வார்னரிடம் பிடி கொடுத்து வெளியேறினார். தனஞ்சய டி சில்வா 14, சண்டிமால் 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

நிதானமாக ஆடி வந்த மேத்யூஸ் 71 பந்துகளில் 39 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டிக்வெல்லா அதிரடியாக விளையாடி 58 ஓட்டங்களை சேர்த்தார். 

சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 59 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. அவுஸ்ரேலியா அணி தரப்பில் நாதன் லயன் 5 விக்கெட்டுகளையும் ஸ்வெப்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.