கைவிடப்பட்ட பாரவூர்தில் இருந்து 46 ஏதிலிகளின் சடலங்கள் மீட்பு!! -அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்-

ஆசிரியர் - Editor II
கைவிடப்பட்ட பாரவூர்தில் இருந்து 46 ஏதிலிகளின் சடலங்கள் மீட்பு!! -அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்-

அமெரிக்கா நாட்டின் டெக்ஸாஸில் கைவிடப்பட்ட பாரவூர்தி ஒன்றிலிருந்து 46 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட அனைவரும் ஏதிலிகள் என நம்பப்படுகிறது.

அத்துடன் 4 சிறுவர்கள் உட்பட 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் அவர்கள் சோர்வாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அந்நாட்டின் மெக்சிகோ எல்லையில் இருந்து 250 கிலோமீற்றர் தூரம் ஆட்கடத்தர்காரர்களுக்கான முக்கிய போக்குவரத்து பாதையாகும். சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிச் செல்வதற்காக ஆட்கடத்தல்காரர்கள் பாரவூர்திகளை பயன்படுத்துகின்றனர்.

இந்தநிலையில் டெக்ஸாஸில் மீட்கப்பட்ட பாரவூர்திக்குள் சுவாச வாயு மற்றும் நீர் என்பன இல்லை என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு