நீர்கொழும்பு கடற்பகுதியில் 47 பேர் கைது..! யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களை சேர்ந்தவர்களும் உள்ளடக்கம்..

ஆசிரியர் - Editor I
நீர்கொழும்பு கடற்பகுதியில் 47 பேர் கைது..! யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களை சேர்ந்தவர்களும் உள்ளடக்கம்..

யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட சில பகுதிகளை சேர்ந்த 7 சிறுவர்கள் உட்பட 47 பேர் நீர்கொழும்பு கடலில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்டபோதே குறித்த 47 பேரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

நீர்கொழும்புக்கு அப்பால் மேற்கு கடற்பரப்பில் பல நாள் மீன்பிடி இழுவை படகில் பயணித்த போதே இவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

அவர்களில் ஆட்கடத்தலுடன் தொடர்புடைய 5 பேர் உட்பட 34 ஆண்களும், 6 பெண்களும் 7 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வென்னப்புவ மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர்.

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு