SuperTopAds

ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சிலரால் மாணவிகள் பாலிஸ் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட விவகாரம்! 3 மாணவர்களை தேடும் பொலிஸார், 6 மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை...

ஆசிரியர் - Editor I
ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சிலரால் மாணவிகள் பாலிஸ் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட விவகாரம்! 3 மாணவர்களை தேடும் பொலிஸார், 6 மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை...

முல்லைத்தீவில் ஆசிரியர் ஒருவரும் உயர்தர வகுப்பு மாணவர்கள் சிலரும் இணைந்து பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததான முறைப்பாட்டின் அடிப்படையில் ஆசிரியர் ஒருவரும், மாணவர் ஒருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 5 மாணவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். 

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 3 மாணவர்களை பொலிஸார் தீவிரமாக தேடிவருகின்றனர். கணித பாடம் கற்பிற்கும் ஆசிரியரால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட மாணவியால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய முல்லைத்தீவு பொலிஸார் செல்வவுரம், சிலாவத்தை, உண்ணாப்பிலவு, கள்ளப்பாடு பகுதிகளை சேர்ந்த நான்கு உயர்தர மாணவர்களை பொலிஸார் கடந்த 20ம் திகதி கைது செய்தனர். 

இந்த சம்பவத்தின் முதன்மை காரணமான மாணவியின் பாடசாலை நண்பன் 18 அகவையுடைய கள்ளப்பாடு தெற்கினை சேந்த உயர்தர மாணவன் கடந்த 21.06.2022 அன்று முல்லைத்தீவு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது நண்பியான பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவியின் நிர்வாண புகைப்படங்களை எடுத்து பிரத்தியேக வகுப்பு ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் பகிர்ந்து கொண்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் தலைமறைவான நிலையில் கடந்த 23.06.2022 அன்று சட்டத்தரணி ஒருவர் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார். இவரையும் எதிர்வரும் 30.06.2022 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்குகள் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான பாதிக்கப்பட்ட மாணவிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்திய முல்லைத்தீவு பொலிஸார் 6 மாணவிகளிடம் விசாரணைகள் மேற்கொண்டு அவர்ளை மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார்கள். 

சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என பொலீசார் தெரிவித்துள்ளார்கள். குறித்த அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுமேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று மாணவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன் இந்த வழக்கின் விசாரணை எதிர்வரும் 30.06.2022 ஆம் திகதி நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.