ரோஹித் ஷர்மாவுக்கு கொரோனா!!

ஆசிரியர் - Editor II
ரோஹித் ஷர்மாவுக்கு கொரோனா!!

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் ரோஹித் ஷர்மாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒத்திவைக்கப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பிப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் அவருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தமது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் பக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ளது. இந்தநிலையில் அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு