கொழும்பு உணவகத்தில் மின்வெட்டில் சிக்கிக்கிய அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர்கள்!!

ஆசிரியர் - Editor II
கொழும்பு உணவகத்தில் மின்வெட்டில் சிக்கிக்கிய அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர்கள்!!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர்கள், இங்குள்ள உள்ளூர் உணவகம் ஒன்றிற்குச் சென்ற போது, இலங்கையில் நிலவும் மின்வெட்டால் பாதிக்கப்பட்டாக அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் பட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தன்து ருவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இவ் வார ஆரம்பத்தில் நாங்கள் உணவகம் ஒன்றுக்கு சென்றோம். இதன்போது மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மின்சாரம் வரும்வரை காத்திருக்கிறோம், மின்சாரம் வந்தவுடன் இரவு உணவு தொடரும்.

இலங்கை தற்போது ஒரு கடினமான காலத்தை கடந்து கொண்டிருக்கிறது, ஆனால் மக்கள் எங்களை ஆச்சரியப்படுத்தியுள்ளனர், மேலும் இங்கு இருப்பதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு