கணவனை நிர்வாணமாக்கி ஊர்வலம்!! -மனைவி கைது-

ஆசிரியர் - Editor II
கணவனை நிர்வாணமாக்கி ஊர்வலம்!! -மனைவி கைது-

இந்தியாவின் ராய்பூர் - சத்தீஸ்கரில் கணவரையும், அவரது காதலியையும் நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்திய மனைவி உள்ளிட்ட 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

சத்தீஸ்கரின் கொண்டாகன் மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் கணவரை வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக பார்த்த கோபத்தில், மனைவி கிராம சபையை கூட்டியுள்ளார். 

அதில், இருவரையும் நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்துவது என, முடிவானது. இதையடுத்து கணவரையும், அந்த பெண்ணையும் நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்தியுள்ளனர்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த பொலிஸார், கணவரை நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்திய மனைவி உள்ளிட்ட 4 பேரை கைது செய்துள்ளனர். 

யாழில் இந்திய மண்ணெண்ணெய் பரல்களில் உருட்டு விட்ட பிரதேச செயலாளர்கள்..

மேலும் சங்கதிக்கு