இங்கிலாந்தை ஆட்டிவைக்கும் குரங்கம்மை!! -மேலும் 104 பேருக்கு பாதிப்பு உறுதி-
இங்கிலாந்து நாட்டில் மேலும் 104 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுப் பரவலை தொடர்ந்து ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய், தற்போது பல உலக நாடுகளில் குரங்கு அம்மை நோயும் பாதிப்பு பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
இந்தநிலையில், இங்கிலாந்தில் மேலும் 104 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 470 ஆக அதிகரித்துள்ளது.