யாழ்ப்பாணம் - பாண்டிச்சோி கப்பல் சேவை/ யாழ்ப்பாணம் - திருச்சி விமான சேவை..! அமைச்சரவையில் பச்சை கொடியாம், அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் - பாண்டிச்சோி கப்பல் சேவை/ யாழ்ப்பாணம் - திருச்சி விமான சேவை..! அமைச்சரவையில் பச்சை கொடியாம், அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்..

யாழ்ப்பாணம் - பாண்டிச்சோி இடையில் பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் சேவைகளை மீள தொடங்குதல் மற்றும் யாழ்ப்பாணம் - திருச்சி இடையில் விமான சேவையை மீள தொடங்குதல் போன்றவற்றுக்கு நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் சாதகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் கூறியுள்ளார். 

இதனடிப்படையில், விரைவில் குறித்த போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 

இதனூடாக மண்ணெண்ணெய், டீசல் போன்ற எரிபொருட்களையும் உரம், பால்மா, மருந்துப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களையும் தேவையானளவு பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுதொடர்பான முயற்சிகளுக்கு பூரணமான ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் துறைசார் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு மக்கள் சார்பில் அமைச்சர் நன்றியை தெரிவித்தார்.

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு