STRCool Tennis போட்டிகள்!! -முதன் முறையா வெற்றி பெற்ற யாழ்.மாவட்ட வீரர்கள்

ஆசிரியர் - Editor II
STRCool Tennis போட்டிகள்!! -முதன் முறையா வெற்றி பெற்ற யாழ்.மாவட்ட வீரர்கள்

இலங்கை டென்னிஸ் சம்மேளனத்தின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட STRCool Tennis இன் 10 வயதுக்கு உட்பட்ட தனிப்பட்டவர்களுக்கான டென்னிஸ் போட்டிகளில் யாழ்.மாவட்ட வீரர்கள் முதன்முறையாக தமது வெற்றிகளை பதிவு செய்துள்ளனர்.

ஆனி மாதம் 10,11,12 ஆம் திகதிகளில் இலங்கை  டென்னிஸ் சம்மேளனத்தில் இப் போட்டிகள் நடைபெற்றன. 

இதில் 8 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான ஒற்றையர் போட்டியில் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் ஜெ.நர்ஸ்வின்   காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 

7 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான இரட்டையர் போட்டியில் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் ரா.ஆரோன் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளார். 


7 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான ஒற்றையர் போட்டியில் யாழ் இந்து ஆரம்பப்பாடசாலை மாணவி வி.அஸ்விதா இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு