3 நாட்களாக குழந்தைகளோடு தானும் பட்டினி..! தற்கொலைக்கு முயன்ற தாய் ஆபத்தான நிலையில், இலங்கையில் நடந்த துயரம்..

ஆசிரியர் - Editor I
3 நாட்களாக குழந்தைகளோடு தானும் பட்டினி..! தற்கொலைக்கு முயன்ற தாய் ஆபத்தான நிலையில், இலங்கையில் நடந்த துயரம்..

3 நாட்களாக குழந்தைகளுக்கு உணவு கொடுக்க வழியில்லாததால் தற்கொலைக்கு முயன்ற தாய் ஒருவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வெல்லவாய பகுதியில் இடம்பெற்றுள்ளது. நச்சு தன்மையுடைய விதைகளை இடித்து, அதனை அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த அந்த தாய், தற்போது பதுளை வைத்தியசாலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

4, 8 மற்றும் 9 வயதுகளில் இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். தந்தைக்கும் நிரந்தர தொழில் இல்லை.சுமார் 3 நாட்களாக நீரை மட்டுமே அருந்தி இவர்கள் உயிர்வாழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் பிள்ளைகள் பட்டினியில் தவிப்பதை, தாங்கிக்கொள்ள முடியாத தாய், தற்கொலை எனும் தவறான முடிவை நாடியுள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக வைத்தியர்கள் தற்போது போராடிக் கொண்டிருக்கின்றனர்.

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு