SuperTopAds

சடலத்தை கொடுக்க 50,000 ரூபா இலஞ்சம் கேட்ட வைத்தியசாலை!! -மகன் உடலை மீட்க்க வீடு, வீடாக யாசகம் பெற்ற பெற்றோர்கள்-

ஆசிரியர் - Editor II
சடலத்தை கொடுக்க 50,000 ரூபா இலஞ்சம் கேட்ட வைத்தியசாலை!! -மகன் உடலை மீட்க்க வீடு, வீடாக யாசகம் பெற்ற பெற்றோர்கள்-

உயிரிழந்த மகனின் உடலை கொடுக்க வைத்தியசாலை ஊழியர்கள் கேட்ட இலங்ச பணத்தை செலுத்துவதற்காக அவரின் பெற்றேர் வீடு விடாக யாசகம் பெற்ற பெற்று சம்பவம் அனைத்து தரப்பினர்களையும் உலுக்கியுள்ளது. 

இந்தியாவின் பீகார் மாநிலம் சமஸ்திபூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் தாகூர் என்பவரின் மகன் சில நாட்களுக்கு முன் காணாமல் போயிருந்த நிலையில் அவர் இறந்து விட்டதாகவும், அவரது உடல் சமஸ்திபூர் அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஷ் தாகூர் மனைவியுடன் வைத்தியசாலைக்குச் சென்றார். தனது மகன் உடலை தரும்படி வைத்தியசாலை ஊழியர்களிடம் கேட்டார்.

ஆனால் 50,000 ரூபா இலஞ்சம் கொடுத்தால் மட்டுமே உடலை தருவோம் என்று ஊழியர்கள் கூறினார். ஏழையான அவரிடம் பணம் இல்லை. இதனால் வைத்தியசாலை ஊழியர்கள் கேட்ட இலஞ்ச பணத்துக்காக ஊர் மக்களிடம் யாசகம் எடுக்க மகேஷ் தாகூர் முடிவு செய்தார்.

அவர் தனது மனைவியுடன் சமஸ்திபூர் நகர் முழுவதும் வீடு வீடாக சென்று தனது நிலைமையை கூறி யாசகம் கேட்டார். அவருக்கு பலர் பணம் கொடுத்தனர். மகேஷ் தாகூரும், அவரது மனைவியும் யாசகம் எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இது தொடர்பாக மகேஷ் தாகூர் கூறும்போது, எனது மகன் உடலை கொடுக்க வைத்தியசாலை ஊழியர்கள் 50 ஆயிரம் ரூபா இலஞ்சம் கேட்டதால் என்ன செய்வது என்று தெரியவில்லை. இதனால் யாசகம் எடுத்தோம் என்றார்.

இதுகுறித்து வைத்தியசாலை நிர்வாகம் கூறும்போது:- இலஞ்சம் கேட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.