அரச மருத்துவமனை வைத்தியர்கள் கிளினிக் நடத்த தடை!! -அரசு அதிரடி உத்தரவு-
இந்தியாவின் தெலுங்கானாவில் அரச வைத்தியசாலைகளில் மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைக்கக் கூடாது என தெலுங்கானா அரசாங்கம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
அரசின் இந்த உத்தரவுக்கு தெலுங்கானா ஜூனியர் வைத்தியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பொதுவாக அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் பெரும்பாலான மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும், கிளினிக் முறையிலும் மருத்துவம் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் அரசாங்க வைத்தியசாலையில் புதிதாக பணியில் சேர்ந்த வைத்தியர்கள் தனியாக கிளினிக் வைக்கக் கூடாது என தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கானா மருத்துவக் கல்விச் சேவைகள் விதிகளில் திருத்தங்களைச் செய்து, வைத்தியர்களின் கிளினிக் பயிற்சிக்கு முழு தடை விதித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.