SuperTopAds

கராச்சியில் இந்து ஆலயங்கள் மீது தாக்குதல்!! -சிலைகள் அடித்துடைப்பு-

ஆசிரியர் - Editor II
கராச்சியில் இந்து ஆலயங்கள் மீது தாக்குதல்!! -சிலைகள் அடித்துடைப்பு-

பாகிஸ்தானின் நாட்டின் கராச்சியின் கோரங்கி பகுதியில் உள்ள ஸ்ரீ மாரி மாதா ஆலயத்தில் உள்ள தெய்வச் சிலைகள் நேற்று புதன்கிழமை அடித்து நொறுக்கப்பட்டன.

இந்த சம்பவம் கராச்சியில் வசிக்கும் இந்து சமூகத்தினரிடையே பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஆறு முதல் எட்டு நபர்கள் மோட்டார் சைக்கிள்களில் அப்பகுதிக்குள் வந்து கோவிலை தாக்கினர். யார் தாக்கினார்கள், எதற்காக தாக்கினார்கள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை என்று அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 

அண்மைக்காலமாக பாகிஸ்தானில் இந்து கோயில்கள் பெரும்பாலும் கும்பல் வன்முறைக்கு இலக்காகின்றன. அக்டோபரில், கோட்ரியில் சிந்து நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க கோயில் அடையாளம் தெரியாத நபர்களால் அவமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதிகாரபூர்வ மதிப்பீட்டின்படி பாகிஸ்தானில் 75 இலட்சம் இந்துக்கள் வாழ்கின்றனர். இருப்பினும், கணக்குப்படி படி, 90 இலட்சத்திற்கும் அதிகமான இந்துக்கள் நாட்டில் வாழ்கின்றனர். 

பாகிஸ்தானின் பெரும்பான்மையான இந்து மக்கள் சிந்து மாகாணத்தில் வாழ்கின்றனர். அங்கு அவர்கள் கலாபயங்கரவாதிகளால் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.