தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக முறையில் தாயகம் திரும்பிய குடும்பம் கைது!

ஆசிரியர் - Admin
தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக முறையில் தாயகம் திரும்பிய குடும்பம் கைது!

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமிலிருந்து சட்டவிரோதமாக முறையில் தாயகம் திரும்பிய கணவன், மனைவி மற்றும் பிள்ளைகள் இருவர் என 4 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை சட்டவிரோதமாக அழைத்து வந்த படகோட்டிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

காங்கேசன்துறை அண்மித்த கடற்பரப்பில் வைத்து இன்று (16) அதிகாலை கடற்படையினர் கைது செய்தனர்.

திருகோணமலையை சொந்த குடும்பம், 2006ஆம் ஆண்டு உள்நாட்டு போர் காரணமாக கடல்வழியாக தமிழகம் சென்றுள்ளதுடன் கடந்த பன்னிரெண்டு வருடங்களாக தமிழக இலங்கை அகதிமுகாமில் வசித்து வந்துள்ளனர்.

இவர்கள் வசித்த அகதி முகாமில் போதிய வசதிகள் இன்மை மற்றும் பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் பெறுவதிலுள்ள இடர்பாடுகளால் இவர்கள் கடல் வழியாக சட்டவிரோமான முறையில் நாடு திரும்பியதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

6 பேரும் விசாரணையின் பின்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தவிருப்பதாக காங்கேசன்துறை பொலிசார் தெரிவித்தனர்.