கோட்டபாய கடற்படைமுகாம் காணியை கபளீகரம் செய்ய அரசு தீவிர முயற்சி..! பொலிஸார், கடற்படை காட்டுமிராண்டித்தனம், வேடிக்கை பார்த்த கடற்படையினரின் குடும்பம்.

ஆசிரியர் - Editor I
கோட்டபாய கடற்படைமுகாம் காணியை கபளீகரம் செய்ய அரசு தீவிர முயற்சி..! பொலிஸார், கடற்படை காட்டுமிராண்டித்தனம், வேடிக்கை பார்த்த கடற்படையினரின் குடும்பம்.

முல்லைத்தீவு - வட்டுவாகல் கோத்தபாய கடற்படை முகாம் அமைந்துள்ள தமிழ் மக்களுக்குரிய 617ஏக்கர் காணிகளை அளவீடுசெய்து, கடற்படையினருக்கு வழங்கும் நில அளவீட்டுத் திணைக்களத்தினரின் முயற்சி நேற்றய தினம் பொதுமக்களின் கடும் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டது. 

இதற்கு முன்னரும் இவ்வாறு குறித்த காணிகளை அளவீடுசெய்து கடற்படையினருக்கு வழங்கும் முயற்சியில் பல தடவைகள் நில அளவீட்டுத் திணைக்களத்தினர் ஈடுபட்டிருந்தனர்.

குறிப்பாக காணி உரிமையாளர்களுக்கு, காணி அளவீடு தொடர்பிலான அறிவித்தல்கள் வழங்கப்பட்டே அளவீட்டு முயற்சிகள் இவ்வாறு முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இருப்பினும் காணிகளுக்குரிய பொதுமக்களால் அம் முயற்சிகள் தொடர்ச்சியாக தடுக்கப்பட்டுவந்தன. இந்நிலையில் இம்முறை தமக்கு, காணி அளவீடு தொடர்பிலான எவ்வித அறிவித்தல்கள் வழங்காமல் நில அளவீட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக காணி உரிமையாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.

அந்தவகையில் காணி அளவீட்டிற்கென வருகைதந்திருந்த நில அளவைத் திணைக்களத்தினரின் வாகனத்தினை கோத்தபாய கடற்படை முகாம் பிரதானவாயிலுக்கு முன்பாக வழிமறித்த காணி உரிமையாளர்கள் நில அளவைத் திணைக்களத்தினரை அங்கிருந்து செல்லுமாறும் கேட்டுக்கொண்டனர்.

அத்தோடு அறிவித்தலின்றி இவ்வாறு காணி அளவீடு முயற்சி மேற்கொள்ளப்படுகின்றமை தொடர்பிலும் காணி உரிமையாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.

இந் நிலையில் அப்போது நில அளவைத் திணைக்கள அதிகாரி நவஜீவன் பதிலளிக்கையில், காணிகளை கடற்படைக்கு வழங்க ஒப்புதல் வழங்கியதாக கூறப்படும், 14பேருக்கு மாத்திரமே தம்மால் அறிவித்தல் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும் அவ்வாறு நில அளவைத் திணைக்களத்தால் 14பேரின் பெயர்விபரங்கள் நிலஅளவைத் திணைக்கள அதிகாரியால் அங்கு வாசிக்கப்பட்டது.

இருப்பினும் கடற்படைக்கு காணிகளை வழங்க ஒப்புதல் தெரிவித்ததாக நிலஅளவைத் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்ட காணி உரிமையாளர்களில், முல்லைத்தீவைச்சேர்ந்த காணி உரிமையாளர்கள் எவரும் அங்கு வருகைதந்திருக்கவில்லை.

மாறாக தென்னிலங்கையைச்சேர்ந் பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த ஆசிரிபெர்ணான்டோ, கிரிஸ்ரி பெர்ணான்டோஆகிய இருவருவரும், மற்றும் சீனப் பிரஜையான சாங் என்பவருமாக மூன்று பேர் மாத்திரமே அங்கு வருகைதந்திருந்தனர்.

இவ்வாறு வருகைதந்தவர்கள் காணிகள் அளவீடு செய்யப்படவேண்டுமென வலியுறுத்தியிருந்தனர். இதனால் முல்லைத்தீவைச் சேர்ந்த காணி உரிமையாளர்களுக்கும் அவ்வாறு வருகைதந்த தென்னிலங்கையர்கள் மற்றும், சீனப் பிரஜைக்குமிடையே வாக்குவாதங்களும் இடம்பெற்றிருந்தன.

தொடர்ந்து தமது காணிகளை அளவீடுசெய்து தம்மிடம் ஒப்படைக்கும்வரையில், கடற்படையினருக்கு காணிகளை வழங்குவதற்காக அளவீடுசெய்வதற்கு தாம் அனுமதிக்கப்போவதில்லை என காணிகளுக்குரிய தமிழ் மக்கள் தெரிவித்தனர்.

அத்தோடு தமது காணிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறும், அதுவரையில் எவ்வித அளவீடுகளுக்கும் தாம் அனுமதிக்கப்போவதில்லை எனக்குறிப்பிட்டு மகஜர் ஒன்றினையும் நிலஅளவைத் திணைக்கள அதிகாரியிடம் கையளித்திருந்தனர்.

தொடர்ந்து நில அளவைத்திணைக்களத்தினரை அங்கிருந்து வெளியேறுமாறு காணிகளுக்குரிய தமிழ் மக்கள் வலியுறுத்தியதற்கு அமைவாக நில அளவைத் திணைக்களத்தினர் அங்கிருந்து வெளியேறினர். 

இதனிடையே புதுக்குடியிருப்பு வீதியூடாக நிலஅளவைத்திணைக்களத்தினர் அங்கிருந்து வெளியேற முற்பட்டனர். எனினும் வேறு வாயிலூடாக கடற்படை முகாமிற்குள் நுளைந்து நில அளவீடுகளை முன்னெடுத்துவிடலாம் என்ற ஐயத்தில், புதுக்குடியிருப்பு வீதியூடாக நிலஅளவைத் திணைக்களத்தினர் செல்வதற்கு காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர்.


அப்போது போலீசாருக்கும் காணிஉரிமையாளர்களின தமிழ் மக்களுக்குமிடையில் தள்ளுமுள்ளு இடம்பெற்றது. பின்னர் முல்லைத்தீவு வீதியூடாக நிலை அளவைத்திணைக்களத்தினர் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.

மேலும் அங்கு செய்திசேகரிப்பில் ஈடுபட்டிருப்த ஊடகவியலாளர்கள் போலீசார் மற்றும், கடற்படை, புலனிய்வாளர்களால் அச்சுறுத்தப்பட்டதுடன், தென்னிலங்கையிலிருந்து வருகைதந்தவர்களும் ஊடகவியலாளர்களைப் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தியிருந்தனர்.

அதேவேளை காணி உரிமையாளர்களுக்கு ஆதரவாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான சி.லோகேஸ்வரன், க.தவராசா, 

வலிகாமம் வடக்கு காணி மீட்புக் குழுத் தலைவரும், பிரதேசசபை உறுப்பினருமான சஜீவன் ஆகியோர் பங்கேற்றிருந்தமைரும் குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு