உரிய நேரத்தில் சிகிச்சை வழங்காமையினால் நோயாளி மரணம் என குற்றச்சாட்டு, வைத்தியர் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் கைது..!

ஆசிரியர் - Editor I
உரிய நேரத்தில் சிகிச்சை வழங்காமையினால் நோயாளி மரணம் என குற்றச்சாட்டு, வைத்தியர் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் கைது..!

நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவத்தையடுத்து சிகிச்சையளித்த வைத்தியர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 4 ர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

பதுளை பொது வைத்தியசாலையில் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு சுகயீனம் ஏற்பட்ட நேரத்தில் உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் உயிரிழந்ததாகக் கூறி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பதுளை, பந்துலுபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வைத்தியர்கள் உட்பட வைத்தியசாலை ஊழியர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு